kalaignar cinema life documentry screened in kalaignar 100

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisment

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை பிரம்மாண்டமாக நடத்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து ஜனவரி 6 ஆம் தேதி கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisment

இதில் கலைஞரின் திரை வாழ்க்கை பற்றிய முழு ஆவணப் படம் திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஏ.எல் விஜய் இயக்கி வருவதாக கூறப்படுகிறது. ஏ.எல் விஜய், இதற்கு முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைதழுவி தலைவி என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.