Advertisment

ரஜினியின் அரசியல் - வைரமுத்துவிடம் விளக்கம் கேட்ட கலைஞர்

Kalaignar asked vairamuthu about rajini politics

ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி ஹீரோவாக நடித்து கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் 'பாபா'. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க ரஜினியே தயாரித்தும் இருந்தார். மனிஷா கொய்ராலா, நம்பியார், விஜயகுமார், கவுண்டமணி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f8207918-abc0-490c-8ce1-8979949857d4" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_39.jpg" />

Advertisment

இப்படம் 20 ஆண்டுகள் கழித்து தற்போது நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு இன்று (10.12.222) தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வைரமுத்து 'பாபா' படத்தின் கலைவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ரஜினிகாந்த் பாபா உள்ளிட்ட படங்களின் கலைவிழாவை சத்தியம் திரையரங்கில் தொடங்கி வைத்தோம். கலை, அரசியல் இரண்டும் பேசினேன். பாபா பாடலில் 'ஏணியாய் நானிருந்து ஏமாற மாட்டேன்' என்ற வரியை எழுதியது நீங்களா? ரஜினிகாந்த் சொல்லியா? என்று கலைஞர் கேட்டார்; அதைப் பதிவு செய்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக 90 களின் மத்தியில் ரஜினியின் அரசியல் வருகை குறித்தானஅவரது பேச்சுக்கள் மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுவந்தது. அதேபோல் ரஜினியின் படங்களில்இடம்பெறும் ஏதாவது ஒருபாடலிலாவதுஅரசியல் குறித்தான வரி இருக்கும். அந்த வகையில்பாபா படத்தில் இடம்பெற்ற 'சக்தி கொடு' பாடலிலும் 'ஏணியாய் நானிருந்து ஏமாற மாட்டேன்...' என்பதும் அந்த சமயத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Actor Rajinikanth Baba former cm kalaignar Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe