Advertisment

"கலகலப்பான தலைவன்" - உதயநிதிக்கு சீனு ராமசாமி வாழ்த்து

Kalaga Thalaivan release date announced

உதயநிதி தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனிடையே மகிழ் திருமேனி இயக்கத்தில் 'கலகத் தலைவன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும்பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'கலகத் தலைவன்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, "நவம்பர் 18ல் திரை தொடும் என் கலகலப்பான (கலகத்) தலைவனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Advertisment

Magizh Thirumeni nidhi agarwal seenu ramasamy Udhayanidhi Stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe