Advertisment

”மாப்பிள்ளைனா இப்படித்தான் இருக்கனும்னு நினச்சேன்” - நயன்தாரா திருமணம் குறித்து நெகிழ்ந்த கலா மாஸ்டர்

 Kala Master

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 4000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள கலா மாஸ்டர், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் தன்னுடைய திரையுலக பயணம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில், அண்மையில் திருமணம் செய்துகொண்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

Advertisment

”மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதியஞ்சலி நிகழ்வில்தான் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியை முதன்முதலாகப் பார்த்தேன். விக்னேஷ் சிவன் எனக்கு ஹலோ மட்டும் சொன்னார். அப்போது நயன்தாராவுடன் அவர் பேசிக்கொண்டதை பார்த்தபோதே மாப்பிள்ளைனா இப்படித்தான் இருக்கனும் என்று நினைத்தேன்.

Advertisment

இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்கின்றனர். ஷுட்டிங் ஸ்பாட்டில் அவர்களைப் பார்த்து பொறாமையும் ஆச்சர்யமும் பட்டிருக்கிறேன். நயன் மாதிரி ஒரு மனைவி கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என விக்கியிடமே சொல்லியிருக்கிறேன். அதேபோல, விக்கி மாதிரி ஒரு பையன் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என நயனிடமும் சொல்லியிருக்கிறேன். அவங்க ரெண்டு பேருக்குள்ளும் எந்த ஈகோவும் கிடையாது. அது பற்றி நயன்தாரா சொன்னபோது ஷாக்காக இருந்தது. அவங்க ரெண்டு பேருமே நல்லா வாழ்வாங்க. ஒரு தம்பதினா இப்படித்தான் இருக்கனும்னு சொல்ற அளவுக்கு வாழ்ந்து காட்டுவாங்க”. இவ்வாறு கலா மாஸ்டர் தெரிவித்தார்.

kala master
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe