Advertisment

ப்ரொமோஷனுக்காக எடுத்த யுக்தி - ரசிகர்களை ஏமாற்றிய கஜோல்

kajol takes breaks from social media is a promotion of his next project

இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஜோல். தமிழில் 'மின்சார கனவு', 'வேலையில்லா பட்டதாரி 2' படங்களில் நடித்துள்ள கஜோல்தற்போது 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' இந்தி வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி வைரலானநிலையில் வருகிற 29 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisment

தனது படங்களின் அப்டேட் மற்றும் தனது பொழுதுபோக்குகளை ட்விட்டரில் பகிர்ந்து வந்த கஜோல் இன்று காலை, "வாழ்க்கையின் கடினமான பிரச்சனைகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு விலகுவதாக தெரிவித்திருந்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியளித்த நிலையில் சிலர் அவரின்அடுத்த படத்தின் ப்ரொமோஷன் எனவும் சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர்.

Advertisment

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் சிலர் கூறி வந்தது போல்அவர் அடுத்து நடித்து வரும் வெப் தொடரை ப்ரொமோஷன் செய்வதற்கு இப்படி ஒரு யுக்தியை கையில் எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'தி ட்ரையல்' என்ற தலைப்பில் ஒரு தொடர் நடித்துள்ளதாகவும், அதன் ட்ரைலர் வருகிற 12 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இத்தொடர் ஆங்கிலத்தில் வெளியான 'தி குட் வைப்' தொடரின் இந்திய ரீமேக்காகும். இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள நிலையில் அந்த கதாபாத்திரத்தை பற்றி தான் தன்னுடைய முந்தைய பதிவில் பதிவிட்டுள்ளார்.

kajol
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe