Skip to main content

ப்ரொமோஷனுக்காக எடுத்த யுக்தி - ரசிகர்களை ஏமாற்றிய கஜோல்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

kajol takes breaks from social media is a promotion of his next project

 

இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஜோல். தமிழில் 'மின்சார கனவு', 'வேலையில்லா பட்டதாரி 2' படங்களில் நடித்துள்ள கஜோல் தற்போது 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' இந்தி வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி வைரலான நிலையில் வருகிற 29 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

 

தனது படங்களின் அப்டேட் மற்றும் தனது பொழுதுபோக்குகளை ட்விட்டரில் பகிர்ந்து வந்த கஜோல் இன்று காலை, "வாழ்க்கையின் கடினமான பிரச்சனைகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு விலகுவதாக தெரிவித்திருந்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியளித்த நிலையில் சிலர் அவரின் அடுத்த படத்தின் ப்ரொமோஷன் எனவும் சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர். 

 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சிலர் கூறி வந்தது போல் அவர் அடுத்து நடித்து வரும் வெப் தொடரை ப்ரொமோஷன் செய்வதற்கு இப்படி ஒரு யுக்தியை கையில் எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'தி ட்ரையல்' என்ற தலைப்பில் ஒரு தொடர் நடித்துள்ளதாகவும், அதன் ட்ரைலர் வருகிற 12 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இத்தொடர் ஆங்கிலத்தில் வெளியான 'தி குட் வைப்' தொடரின் இந்திய ரீமேக்காகும். இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள நிலையில் அந்த கதாபாத்திரத்தை பற்றி தான் தன்னுடைய முந்தைய பதிவில் பதிவிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கல்வி அறிவு இல்லாத அரசியல் தலைவர்கள்” - கஜோலின் கருத்துக்கு எம்பி ரியாக்சன்

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

kajol political leaders comment issue

 

இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஜோல். தமிழில் 'மின்சாரக் கனவு', 'வேலையில்லா பட்டதாரி 2' படங்களில் நடித்துள்ள கஜோல் அண்மையில் இந்தியில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெப் தொடரில் நடித்திருந்தார். இப்போது 'தி ட்ரையல்' என்ற தலைப்பில் ஒரு தொடரில் நடித்து வருகிறார். 

 

இத்தொடர் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதால் அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், அரசியல்வாதிகள் குறித்து ஒரு கருத்தை முன்வைத்தார். "இந்தியா போன்ற நாட்டில் மாற்றம் என்பது மிக மிக மெதுவாகத் தான் நடக்கிறது. ஏனென்றால் நாம் நமது பாரம்பரியம் மற்றும் சிந்தனை செயல்முறைகளில் மூழ்கியுள்ளோம், நிச்சயமாக இது கல்வியுடன் தொடர்புடையது. கல்வி அறிவு இல்லாத ஒரு பின்னணியில் தான் நம் நாட்டின் அரசியல் தலைவர்கள் உள்ளனர்.

 

மன்னிக்கவும். இதை நான் வெளியில் சொல்லித்தான் ஆகவேண்டும். நான் தலைவர்களால் ஆளப்படுகிறேன். அவர்களில் பலர், கண்ணோட்டம் இல்லாதவர்கள். அதனால் கல்வி தான் அவர்களுக்கு தரும் என்று நான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் வித்தியாசமான கண்ணோட்டத்தைக் கவனிக்கும் வாய்ப்பையாவது பெறுவார்கள்" என்றார். இது பெரும் சர்ச்சையை கிளப்ப பின்பு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக, "நான் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு கருத்தை மட்டுமே கூறினேன். எனது நோக்கம் எந்த அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்துவது அல்ல; நாட்டை சரியான பாதையில் வழி நடத்தும் சில சிறந்த தலைவர்களும் நம்மிடம் உள்ளனர்" எனப் பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் கஜோலின் கருத்து குறித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் அபிஷேக் சிங்வி, "கஜோல், நாட்டில் உள்ள படிக்காத தலைவர்களைப் பற்றி அவர் பேசும்போது எந்த ஒரு பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் பாஜ்பாய்கள் மட்டும் ஏன் இப்படி வருத்தப்படுகிறார்கள்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


 

Next Story

சூர்யாவிற்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் ; ரசிகர்கள் கொண்டாட்டம்

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Oscar committee calling on Surya; Fans celebrate

 

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான 94-வது ஆஸ்கர் விழா சமீபத்தில் கோலாகலமாக ஆரம்பித்தது, அந்த விழாவில் வில் ஸ்மித்தின் நடவடிக்கை பெரும் பேசும் பொருளாக மாறி, பின்பு வில் ஸ்மித் 'அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பின் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இது அங்கு பெரிய பரபரப்பை உண்டாக்கியது. 

 

இந்நிலையில் ​2022-ஆம் ஆண்டு ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ​ஆஸ்கார் அகாடமி, 2022-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி 'அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பில் சேர 397 புகழ் பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கஜோல் மற்றும் இந்தி இயக்குநர் ரீமா காக்டி உள்ளிட்ட சிலர் இந்த ஆண்டு இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர்.      

 

இந்த ஆண்டு ஆஸ்கர் உறுப்பினரின் அழைப்பாளர் பட்டியலில் ஆஸ்கர் விருது வென்ற 15 பேர் உட்பட ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 71 பேர் உள்ளனர். இதில் நடிகர்களின் பட்டியலில் சூர்யா இடம்பெற்றுள்ளார். ​ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணையும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை சூர்யா பெறவுள்ளார். இந்த செய்தியை சூர்யா மற்றும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக சூர்யாவின் 'சூரரை போற்று' மற்றும் 'ஜெய் பீம்' போன்ற படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.