மகாரஷ்டிராவில் 60வது மாநில திரைப்படங்களுக்கான விருது கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால் அப்போது பஹல்கான் தாக்குதல் நடந்ததால், தள்ளி வைக்கப்பட்டது. இப்போது நேற்றைய முன் தினமான ஆகஸ்ட் 5ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. இதில் 2022ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருது கொடுக்கப்பட்டது. இதில் நடிகை கஜோலுக்கு விழாவின் மதிப்புமிக்க விருதான ‘ராஜ் கபூர் விருது’ கொடுக்கப்பட்டது. 

விழா முடிந்து செய்தியாளர்கள் சந்தித்த கஜோல், மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் விருது குறித்து பேசியிருந்தார். அப்போது ஒரு செய்தியாளர், இந்தியில் அதை கூறுங்கள் எனக் கேட்டார். அதற்கு இந்தியில் பேச வேண்டுமா எனக் கோபப்பட்டார். பின்பு “நான் பேசுவது யாருக்கு புரிய வேண்டுமோ, அவங்களுக்கு புரியும்” என காட்டமாக பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மகாரஷ்டிராவில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக அம்மாநில அரசால் கட்டாயமாக்கப்பட்டது. பின்பு அது வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து சமீப காலமாக மராத்தி பேசுபவர்களுக்கும் இந்தி பேசுபவர்களுக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில் கஜோல் இப்படி பேசியிருப்பது, ஒரு அவருக்கு ஆதரவு தெரிவித்தும் மற்றொரு தரப்பு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து கூறி வருகின்றனர். ச்கஜோல் தற்போது ‘மகாராக்னி’ படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஜூலை 25ஆம் தேதிதான் ‘சர்சமீன்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு வருகிறது