kajal agar

Advertisment

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களுடனும், தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.

தற்போது கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் காஜல்.

Advertisment

சமீபத்தில் காஜல் அவகர்வால், தொழிலதிபரை கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் அறிவிக்கப்பட்டதைபோல மும்பையில் நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. தற்போது இந்த தம்பதியினருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமண புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் காஜலின் தீவிர ரசிகை ஒருவர், காஜலின் திருமண நாள் ஒரு சாதாரணநாள் அல்ல அது ஒரு விஷேசமான நாள், அதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என கையில் காஜல் என்று ஆங்கிலத்தில் பச்சைக்குத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அந்த ரசிகை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறார்.