உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது.2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அதேபோல இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது.இதுவரை இந்தியாவில் இந்த வைரஸால் இறந்தோர் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுனை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.ஏப்ரல் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் லாக்டவுன் இன்னும் நீட்டிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கரோனா முடிவடைந்த பிறகு என்ன செய்யலாம் என்று தனது யோசனையை ட்விட்டரின் மூலம் பகிர்ந்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். அதில், “கரோனா பிரச்சனைகள் மற்றும் அதன் ஆபத்துகள் முழுவதும் முடிந்த பிறகு, நமது நாட்டுக்காகச் சில நன்மைகள் செய்வோம்.நம்முடைய விடுமுறை நாட்களை இந்தியாவில் செலவிடுவோம், உள்ளூர் உணவகங்ககளில் சாப்பிடுவோம்,உள்ளூர் பழங்கள், காய்கறிகளை வாங்குவோம்,இந்திய நிறுவனங்களின் உடைகள் மற்றும் பொருட்களை வாங்குவோம்,உள்ளூர் வியாபாரிகளை ஆதரிப்போம்.காரணம் இந்தத் தொழில்கள் நமது உதவியின்றி மீண்டு வருவது சற்று சிரமமானது.ஒருவருக்கு ஒருவர் உயர்ந்திட உறுதுணையாக இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.