கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் 85 வயது மூதாட்டியாக நடிப்பதாக தகவல் கசிந்து வருகிறது.

Advertisment

kajal

இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியன் 2 படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விளக்கமளித்து பேசியபோது... ''இந்தியன் 2 படத்தில் நான் தற்காப்பு கலைகள் தெரிந்த ஒரு பெண்ணாக நடிக்கிறேன். அதனால் படத்துக்காக தற்காப்பு கலைகள் கற்று வருகிறேன். இதில் நான் நடிக்கும் கதாபாத்திரதின் வயது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. எனது கதாபாத்திரத்தின் வயது பற்றி மட்டும் இப்போது என்னால் எதுவும் சொல்லமுடியாது. அதை சொல்லக்கூடிய நேரமும் இது இல்லை. இந்த மாதம் தைவானில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. அதில் நானும் கலந்துகொள்ளவுள்ளேன்'' என்றார்.