Advertisment

திருமணத்திற்கு பின் தமிழ்ப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ள காஜல் அகர்வால்...

Kajal Aggarwal

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம்வருபவர்நடிகை காஜல் அகர்வால். அவர் சமீபத்தில் கவுதம் கிச்சலு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு காஜல் அகர்வால் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வியெழுந்தது. இதை உறுதி செய்யும் வகையில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் தனது கணவருடன் சென்னை வந்திருந்த காஜல் அகர்வால், காட்டேரி, கவலை வேண்டாம் படத்தின் இயக்குனரான டீகே-யிடம் கதை கேட்டார். அந்தக் கதை காஜல் அகர்வாலுக்குப் பிடித்துப் போக, அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார் எனச் செய்திகள் வெளியாகின. இந்தப் படம் திருமணத்திற்குப் பிறகு காஜல் அகர்வாலின் முதல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisment

இந்தப் படத்தை நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான ஜாக்பாட் படத்தின் இயக்குனரான கல்யாண் இயக்கவிருக்கிறார். கோஸ்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப்படம் கற்பனை திகில் கலந்த நகைச்சுவைப்படமாக உருவாக உள்ளது. மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்ட 23 நகைச்சுவை நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், இந்தப் படத்தில் முன்னணி கதாநாயகன் ஒருவரை கௌரவத் தோற்றத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe