Advertisment

'இந்தியன் 2'; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல்

Kajal Aggarwal reveals Indian2 shoot resumed September 13th

Advertisment

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துவந்தார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுப் போனது. இதனால் 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்தனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="ab2fa39b-f838-42c7-afa4-c0c7d6f8cc5e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_17.jpg" />

இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. இதனிடையே இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளை முடித்த பிறகு இந்தியன் 2 படத்தின் பணியைத் தொடங்க உள்ளார். இதனிடையே நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்ததன் காரணமாக இந்தியன் 2 படத்திலிருந்து விலகியதாகவும், மேலும் அவருக்குப் பதில் தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்கள் வதந்திகள் பரவின.

Advertisment

இந்நிலையில் இந்தியன் 2 குறித்து நடிகை காஜல் அகர்வால் விளக்கமளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடிய காஜல், செப்டம்பர் 13 ஆம் தேதி இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. விக்ரம் படத்தின் வெற்றியால் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

director Shankar ACTOR KAMAL HASSHAN indian 2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe