Advertisment

“உடல் அழகால் மயங்கியிருக்கும் உலகத்தில்”- வைரலாகும் காஜல் அகர்வால் பதிவு

சீதா என்னும் தெலுங்கு படத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக நடித்த பின்னர் நடிகை காஜல் அகர்வால் ஜெயம் ரவியின் கோமாளி பட ரிலீஸுக்காக காத்திருக்கிறார். ஜெயம் ரவி ஒன்பது வேடங்களில் நடிக்கும் அவரின் 24 படத்தில் காஜல்தான் ஹீரோயின். தெலுங்கு தமிழ் சினிமாத்துறையில் தற்போது உட்ச நட்சத்திரம் என்கிற அந்தஸ்துடன் வலம் வரந்துகொண்டிருக்கிறார்.

Advertisment

kajal aggarwal

இந்நிலையில் காஜல் அகர்வால் துளி மேக்கப் கூட போடாமல் போட்டோஷூட் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

அப்பதிவில் காஜல் அகர்வால், “இப்போதெல்லாம் மனிதர்களால் தங்களை இனம் கண்டுகொள்ளவே முடிவதில்லை. ஒருவேளை நாம் உடல் அழகால் மயங்கியிருக்கும் உலகத்தில் வாழ்வதால் இருக்கலாம் அல்லது சமூக ஊடகம் யாரை, எதை முக்கியப்படுத்துகிறது என்பதில் நமது சுய மரியாதையை விழுங்கியதால் இருக்கலாம்.

உங்களுக்கு கச்சிதமான உடலைத் தருவதாக வாக்கு தரும் அழகு சாதனப் பொருட்களை வாங்க கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. தற்பெருமை எல்லா இடத்திலும் காணக்கிடைக்கிறது. இந்தக் கோடுகளுக்கு நடுவில் அந்தக் கூட்டத்தோடு நாம் இணைய முயற்சிக்கிறோம் அல்லது தனியாக விடப்பட்டதாய் நினைக்கிறோம்.

ஆனால் நம்முடைய வேறொரு பிம்பத்தைப் பெறுவதற்கு முயற்சிப்பதை விட, நாம் நமது உண்மையான சுயத்தை ஏற்றுக்கொண்டால் தான் நம்மால் உண்மையில் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். ஒப்பனை நமது உடலை வேண்டுமானால் அழகாக்கலாம். ஆனால் நமது குணத்தைக் கட்டமைக்குமா? நாம் யார் என்பதை சொல்லுமா? உண்மையான அழகு என்பது, நம்மிடம் இருக்கும் அழகை அப்படியே ஏற்றுக்கொள்வதில் தான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Kajalagarwal komali
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe