kajal aggarwal

Advertisment

நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு கௌதம் கிச்சலு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர், திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு முழுக்கு போடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார்.

'ஹே சினாமிகா', ‘இந்தியன் 2' உட்பட பல படங்களைக் கைவசம் வைத்துள்ள காஜல் அகர்வால், தற்போது பிரபுதேவா நடித்த 'குலேபகாவலி', ஜோதிகா நடித்த 'ஜாக்பாட்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில், காஜல் அகர்வாலுடன் இணைந்து யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார், சந்தான பாரதி, மயில்சாமி, ஊர்வசி, சத்யன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ‘கோஸ்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தற்போது வெளியிட்டுள்ளது.