Skip to main content

இரண்டு மாநிலத் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த காஜல் அகர்வால்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020


கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். 

 

hfh

 

அந்தவகையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நயன்தாராவைத் தொடர்ந்து தற்போது 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட ஃபெப்சி தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்கினார். மேலும் கரோனா வைரஸ் நிவாரணத் தொகையாக தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சமும், பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மஹாராஷ்ட்ரா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும் வழங்கியுள்ளார். மேலும் மும்பையில் தான் வசிக்கும் பகுதியில் அருகளிலுள்ள மக்களுக்கு உணவு மற்றும் தானியங்கள் வழங்கினார். இதுதவிர, பீட்டாவுடன் இணைந்து விலங்குகளைத் தத்தெடுத்தும் உணவளித்தும் உதவி செய்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா தேவிப்ரியாவுக்காக வருத்தப்படுறேன் - காஜல் அகர்வால்

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

 KajalAgarwal interview

 

விரைவில் வெளிவரவிருக்கும் 'கோஸ்டி' படத்தின் நாயகி காஜல் அகர்வாலை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது அவர் தனது திரையுலக அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார்.

 

இந்த நிலையில் நான் இருப்பதற்குக் காரணம் கடவுளின் ஆசி. என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், ரசிகர்கள் அனைவருடைய அன்பும் என்னை இன்னும் அதிகம் பணியாற்றத் தூண்டுகிறது. சென்னை எனக்கு மிகவும் பிடித்த இடம். இது என்னுடைய இரண்டாவது தாய் வீடு. கலாச்சாரம், உணவு, மக்கள் என்று இங்குள்ள அனைத்தும் எனக்குப் பிடிக்கும். இயக்குநர் கல்யாண் மிகவும் தெளிவான சிந்தனையுடையவர். இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.

 

முதல் படமான லட்சுமி படத்தில் நடிப்பது சவாலாக இருந்தது. அப்போது எனக்கு மொழி உட்பட தென்னிந்தியா குறித்து எதுவும் தெரியாது. மகதீரா படத்தில் ராஜமவுலி சாரோடு பணியாற்றியது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. துப்பாக்கி படம் எனக்கு மிகவும் பிடித்த படம். விஜய் சார், முருகதாஸ் சாரோடு அந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். துப்பாக்கி இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நிச்சயம் நான் நடிப்பேன். அஜித் சார் அற்புதமான மனிதர். அவருடைய சமையலை ஒருநாள் நான் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியன் 2 படத்தில் கமல் சார், ஷங்கர் சாரோடு பணியாற்றி வருகிறேன். ஷங்கர் சார் இவ்வளவு பெரிய இடத்தை அடைந்தது அவருடைய உழைப்பால் தான் என்பதை நேரில் பார்த்து வியந்து வருகிறேன். கமல் சார் ஒரு லெஜன்ட்.

 

சமந்தா, ரகுல், தமன்னா ஆகியோர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள். சினிமாவுக்கும் குடும்பத்துக்கும் ஒரு சேர நேரம் செலவிடுவது சவாலான காரியம் தான். ஆனால் இரண்டையும் ஒருவர் விரும்பினால் அது நிச்சயம் சாத்தியம். நான் வாழ்க்கையில் முயற்சி செய்த பெரும்பாலான விஷயங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் வரும் சித்ரா தேவிப்ரியாவுக்கு நடந்தது மாதிரி எனக்கு ஏமாற்றங்கள் நடந்ததில்லை. பாவம் அந்த கேரக்டர். அதற்காக நான் வருத்தப்படுகிறேன் என்றார்.


 

Next Story

"இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது" - காஜல் அகர்வால் அச்சம்!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

grehrhr

 

காஜல் அகர்வால் நடிப்பில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் நேற்று வெளியான ‘லைவ் டெலிகாஸ்ட்’ தொடர், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. மாந்த்ரீக சக்திகள் நிறைந்த, ஒரு ஆள் அரவமற்ற வீட்டில் ஒரு தொலைத் தொடர் ஒன்றை படமாக்கும்போது ஏற்படும் வினோத அனுபவங்களின் தொகுப்பே ‘லைவ் டெலிகாஸ்ட்.’ இத்தொடரில் நடித்த அனுபவம் குறித்து காஜல் அகர்வால் பகிர்ந்துகொண்டபோது...


"நாங்கள் படப்பிடிப்புக்குத் தேர்ந்தெடுத்த இடம் மிக மிகப் பொருத்தமானது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழர் ஒருவருடைய வீடு அது. மலை உச்சியில் இருக்கும் அந்த வீடு, அங்கு தனித்து இருந்த வீடாகும். படப்பிடிப்பு பெரும்பாலும் அங்கேயேதான் நடந்தது. படப்பிடிப்புக்குப் பின்னரும் அந்த இடம் தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்கக் கூட முடியவில்லை. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட அந்த வீட்டிலேயே நான் இருப்பதாக ஒரு பிரமை என்னை அச்சுறுத்திக்கொண்டே இருந்தது. இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது. தொடரைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வு உண்டாகும்" என்றார்.

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் வைபவ் ரெட்டி, ‘கயல்’ ஆனந்தி, ப்ரியங்கா, செல்வா, டேனியல் போப், சுப்பு பஞ்சு அருணாசலம் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தத் தொடர், டிஸ்னி ஹாட் ஸ்டார் விஐபி மற்றும் டிஸ்னி +ஹாட் ஸ்டார் பிரீமியம் ஆகிவற்றில் ஒளிபரப்பாகி வருகிறது.