Advertisment

சினிமாவில் இருந்து விலகுகிறேனா..? - காஜல் அகர்வால் விளக்கம்!

csfsvfsvs

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். சென்ற ஆண்டு அவருக்கு கௌதம் கிச்சலு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் அவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவரது கைவசம் தமிழில் பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, இந்தியன் 2 படங்களும், தெலுங்கில் ஆச்சார்யா, கோஷ்டி போன்ற படங்களும் உள்ளன. இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

Advertisment

அப்போது சினிமாவில் தொடர்ந்து நடிப்பது குறித்து அவர் பேசியபோது...“நான் எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் சினிமாவில் இருந்து விலகும்படி சொன்னால் நடிப்பதை விட்டு விடுவேன். தற்போது எனது கணவரும், குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் தற்போது நடிக்க கவனம் செலுத்துகிறேன்” என்றார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe