Advertisment

"இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது" - காஜல் அகர்வால் அச்சம்!

grehrhr

காஜல் அகர்வால் நடிப்பில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் நேற்று வெளியான ‘லைவ் டெலிகாஸ்ட்’தொடர், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. மாந்த்ரீக சக்திகள் நிறைந்த, ஒரு ஆள் அரவமற்ற வீட்டில் ஒரு தொலைத் தொடர் ஒன்றை படமாக்கும்போது ஏற்படும் வினோத அனுபவங்களின் தொகுப்பே ‘லைவ் டெலிகாஸ்ட்.’ இத்தொடரில் நடித்த அனுபவம் குறித்து காஜல் அகர்வால் பகிர்ந்துகொண்டபோது...

Advertisment

"நாங்கள் படப்பிடிப்புக்குத் தேர்ந்தெடுத்த இடம் மிக மிகப் பொருத்தமானது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழர் ஒருவருடைய வீடு அது. மலைஉச்சியில் இருக்கும் அந்த வீடு, அங்கு தனித்து இருந்த வீடாகும். படப்பிடிப்பு பெரும்பாலும் அங்கேயேதான் நடந்தது. படப்பிடிப்புக்குப் பின்னரும் அந்த இடம்தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்கக் கூட முடியவில்லை. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட அந்த வீட்டிலேயே நான் இருப்பதாக ஒரு பிரமை என்னை அச்சுறுத்திக்கொண்டே இருந்தது. இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது. தொடரைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வு உண்டாகும்" என்றார்.

Advertisment

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் வைபவ் ரெட்டி, ‘கயல்’ ஆனந்தி, ப்ரியங்கா, செல்வா, டேனியல் போப், சுப்பு பஞ்சு அருணாசலம்மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தத் தொடர், டிஸ்னி ஹாட் ஸ்டார் விஐபி மற்றும் டிஸ்னி +ஹாட் ஸ்டார் பிரீமியம் ஆகிவற்றில் ஒளிபரப்பாகி வருகிறது.

Live telecast Kajalagarwal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe