Skip to main content

"சவாலான விஷயங்களில் ஈடுபட இருக்கிறேன்" - காஜல் அகர்வால்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

sasasasas

 

கரோனாவால் ஓடிடி வெளியீட்டுக்கான படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இதனால் பல்வேறு முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வால் வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்தத் தொடருக்கு ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹாரர் படமாக உருவாகியுள்ள இதில் காஜல் அகர்வால் பேயாக நடித்துள்ளார். இந்த வெப் தொடர் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் பேசும்போது,

 

"சமீப காலமாக வெப் தொடர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நடிகர், நடிகைகள் பலரும் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். நானும் வெப் தொடரில் நடிக்கிறேன். இது 10 தொடர்களாக வெளிவரும். தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துவிட்டேன். சவாலான விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருக்கிறேன்'' என்றார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியன் 2' படப்பிடிப்பில் கமல் - வெளியான வீடியோ

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Kamal on the sets of Indian 2

 

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில்  60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் ஷங்கர் ராம் சரணை வைத்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். எனவே ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ஆர்.சி 15 ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நடைபெறும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார்.     

 

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளார். இதனை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ஷங்கருடன் இருக்கும் சில புகைப்படங்கள் மற்றும் ஒரு சிறிய வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனிடையே காஜல் அகர்வால் தனது சமூக வலைதளபக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக குதிரையுடன் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பகிர்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

Next Story

"இனிமையான மனிதர்" - கமலை புகழ்ந்த அமெரிக்க நடிகை

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

indian 2 - american actress mckenzie westmore praised kamalhaasan

 


'விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்த நிலையில், சில பிரச்சனைகளால் தடைப்பட்டுப் போனது. இதனையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கப்படும் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் 'இந்தியன் 2' படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் படம் தொடர்பாக பிரபல ஒப்பனை கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோரை சந்தித்துள்ளார். மைக்கேல் வெஸ்ட்மோர், கமலின் 'இந்தியன்', 'அவ்வை சண்முகி' உள்ளிட்ட படங்களில் ஒப்பனை கலைஞராக பணியாற்றியவர். இந்த படங்களை தொடர்ந்து தற்போது 'இந்தியன் 2' படத்திலும் பணியாற்றவுள்ளார். அப்போது மைக்கேல் வெஸ்ட்மோரின் மகள் மெக்கென்சி வெஸ்ட்மோர் உடன் இருந்தார். 

 

அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மெக்கென்சி வெஸ்ட்மோர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, "உலகில் உள்ள இரண்டு இனிமையான மனிதர்களுடன் சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஒருவர் எனது அப்பா, மற்றொருவர் கமல்ஹாசன் (அவரும் குடும்பத்தில் ஒருவர்). நீங்கள் இதுவரை பார்க்கவில்லை எனில், கமலின் புதிய படமான விக்ரம் படத்தை பாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.