
லைகா நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் தயாராகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல், படப்பிடிப்பு தளத்தில் விபத்து என பல்வேறு பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே ஷெடியூலில் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இதற்கிடையேஹைதராபாத்தில் ‘மொசகல்லு’ தெலுங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்,நடிகை காஜல் அகர்வாலிடம் ‘இந்தியன் 2’ படம் ஏன் நிறுத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த காஜல்... “‘இந்தியன் 2’ படத்தில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவுக்கு வந்து அவர்களால் பணிபுரிய முடியவில்லை. அதனால்தான்‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன" எனக் கூறினார். ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)