style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து 'இந்தியன் 2' இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் வயதான இந்தியன் தாத்தாவாக நடிக்கும் கமலுக்கு புதிய உடல்மொழி மற்றும் தலைமுடி ஸ்டைலை மாற்றி சமீபத்தில் அதற்கான டெஸ்ட் ஷூட் நடத்தியுள்ளார் இயக்குனர் ஷங்கர். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் கமல் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நாயகியாக காஜல் அகர்வால் நடிப்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பாரிஸ் நகருக்கு வரவழைத்து மேக்கப் டெஸ்ட் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர். அந்த மேக்கப் டெஸ்ட் இரண்டு தினங்கள் நடைபெற உள்ளது.