Advertisment

"வாழு, வாழவிடு..." உருவ கேலிக்கு பதிலடி கொடுத்த காஜல் அகர்வால்

Kajal Agarwal retaliated body shamers

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின்முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். கடந்த 2020ஆம் ஆண்டு கெளதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டகாஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.இதனைத் தொடர்ந்து தனது விடுமுறை நாளை துபாயில் கழித்து வரும் காஜல் அகர்வால், தான் கர்ப்பிணியாகஇருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில்பகிர்ந்து வருகிறார். இதனைபார்த்த ரசிகர்கள் நடிகை காஜல் அகர்வாலை உருவ கேலி செய்து மீம்ஸ் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் இது தொடர்பாக வெளியிட்ட பதிவில், "எனது வாழ்க்கையில், எனது உடலில், எனது வீட்டில் மிக குறிப்பாக என்னுடைய பணியிடத்தில் அற்புதமான புதிய மாற்றங்களை சமீப காலமாக நான் சந்தித்து வருகிறேன். மேலும், குறிப்பிட்ட சில கருத்துக்கள், உடல் கேலி பதிவுகள், மீம்கள் எதற்கும் உதவாது. அன்பாக இருக்ககற்றுக்கொள்வோம். கொஞ்சம் கடினமாகத்தான்இருக்கும் என நினைக்கிறேன், வாழு, வாழவிடு " எனக் குறிப்பிட்டுநீண்ட அறிக்கையைவெளியிட்டுள்ளார்.

Advertisment

body shamers tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe