Advertisment

காஜல் பதிவிட்ட புகைப்படம்... ரசிகர்களின் யூகங்கள்

kajal agarawal

Advertisment

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களுடனும், தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.

தற்போது கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் காஜல்.

சமீபத்தில் காஜல் அவகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், மாப்பிள்ளை பெரிய தொழிலதிபர் என்றும் தகவல் வெளியானது. ஆனால், இன்னும் இதுகுறித்து காஜல் அகர்வால் தரப்பில் எந்த நிலைப்பாடும் தெரிவிக்கவில்லை.

Advertisment

இந்நிலையில், காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹார்ட்டின் புகைப்படத்தை பகிர்ந்திருப்பதுஅவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காஜல் அகர்வால் காதலில் விழுந்துவிட்டார்,திருமணம் செய்துகொள்ள போகிறார் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.

Kajalagarwal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe