ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க அதில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்து கடந்த 15ஆம் தேதி வெளியான படம் கோமாளி. 90ஸ் கிட்ஸ் பற்றியான கருவை கொண்டுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertisment

kajal agarwal

இதனை அடுத்து காஜல் அகர்வால் கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இதனையடுத்து ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்க இருக்கிறாராம். இந்த படங்கள் குறித்து காஜல் கூறுகையில், “இந்தியன் 2 படபிடிப்பிற்கான என்னுடைய பகுதி செப்டம்பரில் தொடங்கும் என ஆர்வத்துடன் இருக்கிறேன். ஹாலிவுட் படத்திற்காக களரி களரி பயிற்சியைத் தொடர வேண்டும். குதிரை ஏற்றமும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். இதில் நான் நடிக்கும் கதாபாத்திரம் இதுவரை நான் நடிக்காதது. என்னுடைய சினிமா வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரமாக இது இருக்கும். ஹாலிவுட் படமாக அது இருந்தாலும அதில் நிறைய இந்திய தன்மை இருக்கும்.

சர்வதேச அளவில் எல்லோரையும் சென்றடையும். சகோதரர்களுக்குள் நடக்கும் இந்தக் கதை நிஜமாக நடந்தது. இந்தப் படம் மாண்டரின், காண்டனீஸ், ஆங்கிலம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது. மாநில மொழிகள் என்கிற வரையறைகளை, எல்லைகளை எல்லாம் சினிமா தாண்டிவிட்டது என்று நினைக்கிறேன்.

Advertisment

இணையத்தின் வளர்ச்சியால் எல்லோரும் எல்லாவற்றையும் பார்க்கின்றனர். ஒரு படத்தின் கதை நன்றாக இருக்கும் பட்சத்தில் மொழி இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. சத்தீஸ்கரில் கூட என் படம் பார்த்து பாராட்டுபவர்கள் இருக்கிறார்கள்”என்றார்.