style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
நடிகர் கமல்ஹாசன் அடுத்தாக ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் 'இந்தியன் 2' படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து வரும் நிலையில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் நயன்தாரா இந்த வாய்ப்பை தற்போது மறுத்துவிட்டதாகவும் அவருக்கு பதிலாக காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் இரு வேடங்களில் நடிக்கும் இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருக்கிறது. மேலும் காஜல் அகர்வால் ரஜினி, கமல் தவிர மற்ற அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.