Advertisment

கார்த்தி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்

kaithi movie hindi remake bhola shooting started

‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கியிருந்தார். அஞ்சாதே நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது.

Advertisment

அந்தவகையில்இப்படத்தைஇந்தியில் 'போலா'என்ற பெயரில்இயக்குநர் தர்மேந்திர சர்மாஇயக்குகிறார். அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம், அஜய் தேவ்கன் பிலிம்ஸ்நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(12.1.2022)நடைபெற்று வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.விரைவில் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

lokesh kanagaraj ajay devgan kaithi actor karthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe