Advertisment

தீபாவளி ரிலீஸுக்கு தயாரான ‘கைதி’ படம்!

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. மாநகரம் என்னும் முதல் படத்தின் மூலம் பிரபலமடைந்த லோகேஷ் இரண்டு வருடங்கள் கழித்து இயக்கிய படம்தான் இந்த கைதி. இது தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

kaithi

இந்த படத்தின் ட்ரைலர் கடந்த 7ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் கார்த்திக்கு ஜோடியாக எந்த ஹீரோயினும் இன்றி தமிழ் சினிமாவில் ஒரு புதுமுயற்சியை கையாழுகின்றனர். கார்த்தியுடன் நரேன், தீனா, ரமணன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க சத்ய சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த படத்தில் அன்பறிவ் சண்டைபயிற்சி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

Advertisment

இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தணிக்கை குழு இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது படமான கைதி வெளியாகுவதற்கு முன்பே விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

actor karthi kaithi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe