கடந்த தீபாவளி பண்டிகைக்கு கார்த்தி நடிப்பில் உருவாகி வெளியான படம் கைதி. இந்த படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ஹீரோயின் இல்லாத இந்த படத்தில் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

Advertisment

ajay devgan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான ஆக்‌ஷன் கதை களத்தில், எந்தவொரு பாடல்களும் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்தார். சாம் சி எஸ் இசையமைக்க, பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்தார். எஸ்.ஆர். பிரபு இப்படத்தை தயாரித்து வெளியிட்டார்.

இந்த படம் விஜய்யின் பிகில் படத்துடன் ரிலீஸாகி, 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில், ‘கைதி’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமே படத்தைத் தயாரிக்கிறது. இதன்மூலம் முதன்முறையாக இந்தியில் கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

Advertisment

இந்நிலையில், கார்த்திக் நடித்த கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிப்பாரா, ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பாரா என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பேச்சு வந்த நிலையில் அஜய்தேவ்கன் அக்கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.