விரைவில் 'கைதி' படத்தின் இரண்டாம் பாகம்

kaithi 2 movie update out now

‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கியிருந்தார். அஞ்சாதே நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. ‘கைதி’ படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக இருந்துவருகின்றனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f6cede52-b4d5-4ea7-a0e3-82d576280723" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_0.jpg" />

இந்நிலையில், ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது. ‘கைதி 2’ படத்திற்கான பெரும்பாலான காட்சிகள் முதல் பாகம் எடுக்கும்போதே படமாக்கப்பட்டுள்ளதால், 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முன்னர் தெரிவித்திருந்தார். இவர்தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்கிவருகிறார். நடிகர் கார்த்தி, முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ படத்தில் நடித்துவருகிறார். இந்த இரு படங்களின்பணிகள் நிறைவடைந்த பிறகு ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor karthi kaithi kaithi 2 lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Subscribe