
திருப்பத்தூர் வாணியம்பாடி அருகில் உள்ள கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாணவி சுகாஷினி. இவர் கடந்த மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில் மார்ச் 25ஆம் தேதி, தேர்வு எழுத பேருந்துக்காக காத்திருந்த போது பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் அதனை ஓடி சென்று பிடித்து ஏறினார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
பின்பு பொதுத் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் அந்த மாணவி 437 மதிப்பெண்கள் எடுத்து 72.83 சதவிகித்துடன் தேர்ச்சி பெற்றார். தேர்வு நாளில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தை விடாப்பிடியாக ஓடிச் சென்று தேர்வு எழுதி பின்பு தேர்ச்சி பெற்ற அந்த மாணவிக்கு பலரது தரப்பில் இருந்து பரட்டுக்கள் வந்தது.
இந்த நிலையில் அந்த மாணவிக்கு ‘கடுக்கா’ படத்தின் நாயகன் விஜய் கௌரிஷ் ஸ்கூட்டியை பரிசாக வழங்கியுள்ளார். கடுக்கா படத்தில் விஜய் கௌரிஷ் நடித்தது மட்டும் இல்லாமல் தயாரித்தும் உள்ளார். இவருடன் ஸ்மேஹா மற்றும் ஆதர்ஷ் மதிகாந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்க கெவின் என்பவர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் தேவா குரலில் கடந்த மாதம் ‘பொல்லாத பார்வை’ எனும் பாடல் வெளியாகியிருந்தது. இன்று படத்தின் இப்படம் ஜூனில் திரைக்கு வரவுள்ளது