Advertisment

அஜித்தின் மெகா ஹிட் படத்தின் 25 ஆவது ஆண்டை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

Devayani

Advertisment

அகத்தியன் இயக்கத்தில் அஜித், தேவயானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் காதல் கோட்டை. சிவசக்தி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்ய, தேவா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றதோடு தமிழ்த் திரையுலகில் காதல் படங்களுக்குப் புதிய பாதையையும் ஏற்படுத்திக்கொடுத்தது.

இந்த நிலையில், காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நாளைக் கொண்டாடும் விதமாக படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது. இந்த நிகழ்வில் இயக்குநர் அகத்தியன், தங்கர்பச்சான், தலைவாசல் விஜய், தேவயானி, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

ACTOR AJITHKUMAR thangar bachan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe