Published on 27/12/2018 | Edited on 27/12/2018

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் 'கடாரம் கொண்டான்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் இப்படத்தில் நாயகனாக சியான் விக்ரம் நடித்து வருகிறார். மேலும் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், மற்றும் நாசரின் மகன் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் குறித்து சமீபத்தில் ராஜேஷ் எம்.செல்வா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...'கடாரம் கொண்டான் படத்தின் இரண்டாவது போஸ்டர் புத்தாண்டுக்கு வெளியாக இருக்கிறது. அத்துடன் மற்றொரு சிறப்பு அறிவிப்பு ஒன்றும் வெளியாக இருக்கிறது. சியான் ரசிகர்களுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.