Published on 11/01/2019 | Edited on 11/01/2019

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் 'கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சமீபத்தில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருடன் இரவு விருந்தை முடித்த இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, தன் ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் பாக்கி இருப்பதாக பதிவிட்டுள்ளார். இப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி ஆகியோர் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார்கள். படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.