/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kadambur-raju_9.jpg)
கோவில்பட்டியில் 12ஆம் தேதி அதிமுக சார்பில் தனியார் மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றிற்கான முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்யவதற்காக அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கடம்பூர்.செ.ராஜூ சென்றிருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்றைக்கு திரையரங்கு திறப்பதற்கு பற்றி முடிவு எடுக்காத நிலையில் மற்ற நடவடிக்கைகள் (ஐபிஎல் ஒளிப்பரப்புவது) பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது.
சமூக இடைவெளியுடன் உள்ளவற்றுக்குதான் தளர்வு அளிக்கபட்டுள்ளது. வணிக நிறுவனங்களில் அரைமணி நேரத்திற்கு மேலாக மக்கள் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் திரையரங்குகளில் மக்கள் 3 மணி நேரம் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மத்திய அரசு கடந்த 8ஆம் தேதி காணொளிகாட்சி மூலமாக திரையரங்கு உரிமையாளர்களிடம் திரையரங்கு திறப்பது பற்றி ஆலோசனை நடத்தியது. திரையரங்கு திறப்பது பற்றி மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கியுள்ளது.இங்குள்ள நிலைமை ஆராய்ந்து, கண்காணித்து தமிழக அரசு திரையரங்கு திறப்பது பற்றி முடிவு செய்யும், அதன் பின்னர் மற்ற அம்சங்கள் (ஐ.பி.எல் ஒளிப்பரப்பு) குறித்து பரீசிலனை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)