kadambur raju

கரோனா அச்சுறுத்தலால்கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்தில் எந்தத் திரையரங்கமும் திறக்கப்படாமல் இருக்கின்றது. மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பதும் யாருக்கும் தெரியவில்லை.

Advertisment

இந்தியாவில் திரையரங்குகளின் நிலை இப்படி இருக்க சீனா, கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சினிமா தியேட்டர்களைஇயங்கத் தொடங்கியுள்ளன.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் எப்போது திரையரங்குகள் வழக்கம் போல் செயல்படும் எனும் கேள்விக்கு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இப்போதைக்கு தியேட்டர்களைத் திறக்கும் வாய்ப்பில்லை. வெளிநாட்டில் இருப்பது போல சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தியேட்டர்கள் நடத்தினால், அது அதன் உரிமையாளர்களுத்தான் நஷ்டம். இதுகுறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.