
'ஹர ஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' உள்ளிட்ட அடல்ட் காமெடி படங்களை எடுத்து பிரபலமானவர் இயக்குனர் சந்தோஷ்..
இந்நிலையில், அவருடைய அடுத்த படத்தையும் அடல்ட் காமெடி என்னும் ஜானரிலேயே எடுத்து சர்ச்சையைக்கிளப்பியுள்ளார். ’இரண்டாம் குத்து’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
டீஸரில், மிகவும் மோசமான கவர்ச்சி காட்சிகள் மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் இருப்பதால் பலரும் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா இப்படம் குறித்து கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்பின் பாரதிராஜாவின் 'டிக் டிக் டிக்' படத்திலிருந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு, பாரதிராஜாவை கேள்வி கேட்டிருந்தார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
இதனைத் தொடர்ந்து, இது மேலும் சர்ச்சையானது. இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ இந்த படம் குறித்து பேசியுள்ளார். அதில், “தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைச் சீரழிக்கும் எந்தப் படமாக இருந்தாலும் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திரைப்படங்களில் வரும் ஆபாசக் காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கும், சென்சார் போர்டுக்கும் வலியுறுத்தப்படும். அத்தகைய படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கு நல்ல கருத்துகளைக் கூறும் சாதனமாக திரைப்படங்கள் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)