kadamban parai

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி, இயக்கி, தயாரிக்கும் 'கடமான்பாறை' படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கி உள்ளனர். மேலும் இதுகுறித்து பட இயக்குனர் மன்சூரலிகான் பேசும்போது...

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

"என் படத்தில் என்ன கமர்ஷியல் இருக்க வேண்டுமோ அது இருக்கிறது. அதனால் 'A' தான் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன், அது சரியாக கிடைத்திருக்கிறது. காதல், மோதல், காமெடி எல்லாம் இப்படத்தில். இருக்கிறது" என்றார். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.