பெண்களை இழிவுப்படுத்திய போஸ்டர்...தப்பித்த விஜய் சேதுபதி...

hhhh

சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சினிமா விளம்பரம் ஒன்று பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் அந்த ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிடுகிறார் என்ற செய்தி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

கடலை போட ஒரு பொண்ணு வேண்டும் என்கிற தலைப்பில் ஒரு புதிய படம் வெளியாகிறது. காதலர் தினமான இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாகவும், அதை நடிகர் விஜய் சேதுபதி ரிலீஸ் செய்ய இருக்கிறார் என்றும் இந்த படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் கடலை என்கிற வார்த்தையை எடுத்து விட்டு, மிச்சத்தை மட்டும் போட்டு சென்னை முழுவதும் போஸ்டரை ஒட்டி இந்த படத்திற்கு விளம்பரம் செய்துள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் பலரும் இந்த படக்குழுவின் மீத் செம கோவத்தில் இருக்கின்றனர். படம் விளம்பரத்திற்காக பெண்களை இழிவு செய்து போஸ்டர் ஒட்டுவதா என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்தப் போஸ்டருக்கு மகளிர் அமைப்பினரும், முற்போக்கு இயக்கங்களும், இடதுசாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இப்பட ஃபர்ஸ்ட்லுக்கை விஜய் சேதுபதி வெளியிடுவது அவருக்குதான் அவமானம் என சிலரும் கருத்து தெரிவித்தனர். இந்தநிலையில் காலை 11 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடுவதாக இருந்த இந்த போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிடவில்லை.

இதையும் படியுங்கள்
Subscribe