Advertisment

என்ன நடிகர்யா இவரு? - மீண்டும் மிரள வைத்த விஜய் சேதுபதி!

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களை தொடர்ந்து மணிகண்டன் இயக்கி வந்த படம் கடைசி விவசாயி. இந்த படத்தின் தயாரிப்பு, ஒளிப்பதிவு என்று பல துறைகளிலும் அவருடைய ஈடுபாடு இருந்ததால் கடந்த இரண்டு வருடங்களாக படம் ரெடியானது.

Advertisment

vijay sethupathi

நல்லாண்டி என்பவர் விவசாயி கதாபாத்திரத்திலும், விஜய்சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் கதாபாத்திரத்திலும், யோகிபாபு யானை பாகன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரையும் கவர்ந்திருக்கிறது. தனது முதல் படத்திலிருந்து கலைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே இயக்குனர் மணிகண்டன் படம் இயக்கி வருகிறார், இப்படைப்பு அவ்வாரே இருக்கும் என ட்ரைலரை பார்க்கும்போது தோண்றுகிறது.

manikandan Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe