காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். இந்த படம் தேசிய விருது மற்றும் உலகளவில் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெருமை சேர்த்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajnikanth_1.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இவரும் நடிகர் விஜய்சேதுபதியும் குறும்படங்கள் இயக்கும் காலத்திலிருந்து ஒன்றாக இணைந்து பல குறும்படங்கள் பணிபுரிந்துள்ளனர். இந்த பழக்கம் வெள்ளித்திரையிலும் தொடர்ந்தது. விஜய் சேதுபதியை வைத்து மணிகண்டன் இயக்கிய ஆண்டவன் கட்டளை படம் வெளியாகி செம ஹிட் அடித்தது.
இந்த இயக்குநரின் மூன்றாவது படம் ‘கடைசி விவசாயி’. முதலில் விஜய் சேதுபதிதான் இப்படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. பின்னர், அவர் பிஸியாகிவிட்டதால் வேறு ஒரு புது முகத்தை வைத்து இப்படத்தை எடுப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அதுவும் சரிவராததால் தானே அப்படத்தில் நடிப்பதாக கூறி நடித்து வருகிறார்.
மிக வித்தியாசமான வேடத்தில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவி வந்தது. இயக்குநர் மணிகண்டன் இயக்கும் இப்படத்தின் புகைப்படங்கள் சில வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசும் இப்படத்தில், விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்காக விஜய் சேதுபதி போட்டிருக்கும் புதிய கெட்டப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த கதையை எழுதிய இயக்குநர் மணிகண்டன், முதன் முதலாக கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம்தான் சொன்னாராம். ஆனால், அவர் இதில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று இயக்குநர் மணிகண்டன் தெரிவித்தாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)