/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/08_11.jpg)
ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் ஆர்.சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கப்ஸா'. இப்படத்தில் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஏழு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் ‘கப்ஸா' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் யூ-ட்யூபில் வெளியான இந்த டீசர் தற்போது வரை 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. ஆக்ஷன் திரில்லர் ஜானரில் கேங்ஸ்டராக உபேந்திரா நடித்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us