கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்த படம் அர்ஜூன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான இப்படத்தை சந்தீப் வங்கா ரெட்டி இயக்கினார். படத்தின் போஸ்டர் ரிலீஸில் தொடங்கிய சர்ச்சை படம் வெளியானவரை ஒரே சர்ச்சையாக இருந்தது. படத்தில் முத்தக்காட்சிகள் இடம்பெற்றிருந்ததே காரணம். மாடர்ன் ஏஜ் காதல் கதையாக இருந்த இப்படத்தை மாடர்ன் தேவதாஸ் என்றும் பல விமர்சகர்கள் விமர்சித்தார்கள்.

Advertisment

kabir singh

தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழி பேசுபவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டனர். தமிழில் தனுஷ் இந்த படத்தை வாங்க முனைப்பு காட்டுவதாக சொல்லப்பட்டது. ஆனால், எது வேறு ஒருவருக்கு கைமாறி இறுதியில் விக்ரமனின் மகன் துருவ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஆதித்ய வர்மா என்று இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஹிந்தியிலும் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டு, தெலுங்கு படத்தை இயக்கிய சந்தீப் வங்கா ரெட்டியை ஹிந்தியிலும் இயக்க திட்டமிட்டனர். ஷாகித் கபூர் மற்றும் கியாரா அத்வானி இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். ஹிந்தியில் பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் இப்படம் வெளியானது.

Advertisment

படம் வெளியான நாள் முதல் நல்ல வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்தது. இந்நிலையில் வசூல் வேட்டையில் இறங்கியது இப்படம். சரசரவென ஐந்து நாட்களில் 100 கோடியை வசூல் செய்தது. தற்போது 250 கோடி வரை வசூல் செய்து, சாதனை படைத்துள்ளது. ஷாகித் கபூர் தனியாக நடித்து இத்தனை கோடி வசூல் குவித்துள்ளது இதுவே முதல் முறை ஆகும். அதிக வசூல் செய்த முதல் 10 ஹிந்தி படங்களில் கபீர் சிங்கும் சேர்ந்திருப்பதாக தெரிவிக்கிறது ஹிந்தி வட்டாரம்.

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, சுமார் 51 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.