Advertisment

"கமல் பேசும் வசனம் வீரியமுள்ள விதை" - கபிலன் வைரமுத்து

Advertisment

kabilan vairamuthu tweet about kamalhaasan vikram film

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் விக்ரம் திரைப்படம் வெளியான 3 நாளில் உலக அளவில் ரூ.150 கோடி வசூல்செய்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளோடுபோதைப்பொருளுக்கு எதிராக கமல் பேசும் வசனமும்நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இது குறித்து வைரமுத்துவின் மகனும், எழுத்தாளருமானகபிலன் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, "போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவது குறித்து உலகநாயகன் அவர்கள் பேசியிருக்கும் வசனம் வீரியமுள்ள விதை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ACTOR KAMAL HASSHAN vikram movie
இதையும் படியுங்கள்
Subscribe