Advertisment

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வாசிப்பு விழாவிற்கு கபிலன் வைரமுத்து, சோ.தர்மன் நூல்கள் தேர்வு!

kabilan vairamuthu

சிங்கப்பூர் தேசிய வாசிப்பு இயக்கத்தின் முக்கிய நிகழ்வான வாசிப்பு விழாவில் கபிலன் வைரமுத்து எழுதிய மெய்நிகரி மற்றும் அம்பறாத்தூணி, சோ தர்மன் எழுதிய சூல் ஆகிய நூல்கள் இடம் பெறுகின்றன.

Advertisment

இது குறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், "நான்கு அதிகாரத்துவ மொழிகளில் சிங்கப்பூர் வாசகர்களின் வாசிப்பை ஊக்குவிக்க சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் சிறப்பு நிகழ்வுதான் சிங்கப்பூர் வாசிப்பு விழா. உரைகள், பட்டறைகள் போன்ற வழக்கமான நிகழ்ச்சிகளுக்கு அப்பால் எளிமையான முறையிலும் புதுமையான வழிகளிலும் வாசிப்பை அறிமுகம் செய்ய முனைகிறது இந்த வாசிப்பு விழா. இதில், கலைச் சிற்பங்கள், விளையாட்டுகள், புதுமையான இலக்கியத் தடங்கள் போன்றவை அடங்கும். தேசிய வாசிப்பு இயக்கத்தின் மிக முக்கியமான நிகழ்வு வாசிப்பு விழா. இளம் எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவின் மெய்நிகரி என்ற நாவலும், அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்சோ தர்மனின் சூல் என்ற நாவலும் வாசிப்பு விழாவின் சிறப்பு அம்சங்களாக இடம் பெறுகின்றன. நூல்கள் மூலமும் அவற்றைச் சுற்றிய உரையாடல்கள் மூலமும் கற்றலை ஊக்குவிப்பதற்கு பொருத்தமான நூல்களாக இவை அமைந்துள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

தொலைக்காட்சி ஊடகத்தில் பணியாற்றும் ஐந்து இளைஞர்களின் அனுபவங்கள் வழி நிகழ்கால காட்சி ஊடகத்தின் பின்னணியை விவரிக்கும் மெய்நிகரி கபிலன் வைரமுத்துவின் மூன்றாவது நாவல். இது, 2014-ஆம் ஆண்டு வெளிவந்தது. பதினைந்து சிறுகதைகளைக் கொண்ட அம்பறாத்தூணி கபிலன் வைரமுத்துவின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பு. இது கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியானது. 2019ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை வென்ற நூல் எழுத்தாளர் சோ தர்மன் எழுதிய சூல் என்ற நாவல். 1947-ல் சுதந்திரம் கிடைத்தபோது, தமிழகத்தில் 39,640 கண்மாய்கள் இருந்தன. அந்த கண்மாய்களின் இன்றைய நிலை என்ன என்பதே ‘சூல்’ நாவலின் மையக்கரு. சூல் என்றால் நிறைசூலி. உயிரை உற்பத்தி செய்பவள். பிரசவிக்கும் தாயாக அந்த நாவலை உருவகப்படுத்தியுள்ளார் சோ தர்மன்.

நூலக வாரியத்தின் வாசிப்பு விழாவில் இவ்விரு எழுத்தாளர்களும் கெளரவிக்கப்படவுள்ளனர்.

kabilan vairamuthu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe