Skip to main content

வட இந்தியாவை உலுக்கிய லாரி திருட்டு... உண்மை சம்பவத்தில் உருவாகும் 'கபளீகரம்' 

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

Kabalikaram movie based on true incident.

 

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுவரும் ‘கபளீகரம்’ படத்தை தக்ஷன் விஜய் இயக்கி நடித்துவருகிறார். வட இந்தியாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய லாரி திருடும் கும்பலைக் காவல்துறை எப்படி கையாண்டார்கள் என்ற உண்மைக் கதையை மையமாக வைத்து 'கபளீகரம்' படம் எடுக்கப்பட்டுவருகிறது. இப்படத்திற்கு கார்த்திக் இசையமைக்க, மகிழ் புரொடக்சஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

 

ad

 

இப்படம் குறித்து இயக்குநரும் படத்தின் நாயகனுமான தக்ஷன் விஜய் கூறுகையில், “சில உண்மைச் சம்பவங்கள் கற்பனையை மிஞ்சும் அளவிற்கு இருக்கும். இப்படிப்பட்ட லாரி திருடும் கும்பல் கல்கத்தாவில் சிக்கியது. இந்தக் கும்பல் லாரிகளைத் திருடும்போது லாரி ஓட்டிவந்த ஓட்டுநரையும் உடனிருக்கும் கிளீனரையும் கொலைசெய்து எரித்து அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடுவார்கள். எந்தத் தடயமும் இருக்காது. அவர்களின் செயல்களைப் பார்த்த போலீசார் அது கற்பனையையே மிஞ்சும் வகையில் இருந்ததாக வியந்துள்ளனர். அந்தச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

சென்னை, பெங்களூரு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு, இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கவனம் செலுத்திவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்