bhsh

‘கொலைகாரன்’ வெற்றியைத் தொடர்ந்து கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் சார்பில் ஜி.தனஞ்செயன் தயாரிக்கும் படம் ‘கபடதாரி’. சிபிராஜ், நந்திதா ஸ்வேதா ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கரோனா பிரச்சினையால் பின்னணி வேலைகள் தொடங்கப்படாமல் இருந்தது.

Advertisment

Advertisment

இந்நிலையில், தமிழக அரசு சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளுக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து நேற்று பல்வேறு படங்களில் பின்னணி வேலைகள் தொடங்கியது. அதன்படி, ’கபடதாரி’ படத்தின் டப்பிங் பணிகள் பாதுகாப்பு அம்சங்களுடன், இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து இப்படத்தின்பின்னணி வேலைகள் அனைத்தும் விரைவில் முடித்து, படத்தை ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் கதையை ஹேமந்த் ராவ் எழுத, ஜான் மகேந்திரன் மற்றும் ஜி.தனஞ்செயன் இருவரும் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரிக்கிறார்.