Advertisment

கபடதாரி பட ஷூட்டிங் நிறைவு!

kabadadhari

Advertisment

'வால்டர்' படத்தை தொடர்ந்து சிபி சத்யராஜ் நடித்திருக்கும் படம் ’கபடதாரி’. இந்தப் படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இயக்குனர் ஜான் மகேந்திரன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கின்றனர். ஜான் மகேந்திரன், விஜய் நடித்த ‘சச்சின்’ படத்தின் இயக்குனர். 'சத்யா' பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் சார்பாக தனஞ்செயன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியையும் பாராட்டையும் பெற்ற ‘கவுலதாரி’ படத்தின் ரீமேக்கான இப்படம் ஒரு த்ரில்லர்.சிபி ராஜுடன் இணைந்து நாசர், ஜெயப்பிரகாஷ், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சைமன் கே கிங் படத்திற்கு இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன்.கே.எல். இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இந்த வருட தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டது. திடீரென கரோனாவால் ஷூட்டிங் முடங்கியது. தற்போது தமிழக அரசின் அனுமதிக்கு பின்னர் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. நேற்று இப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment

இதனிடையே படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியபோது இப்படத்தின் டப்பிங் பணிகளை முன்னரே தொடங்கிவிட்டது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் படத்தை ரிலீஸ் செய்ய இறுதிக்கட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dhananjeyan sibiraj
இதையும் படியுங்கள்
Subscribe