Advertisment

தியேட்டரில் 24 மணிநேரமும் ஓடும் திரைப்படம்....! பிரேமம் நிவின் பாலி செய்யும் புதிய முயற்சி 

kayamkulam kuchunni

நிவின் பாலி, பிரியா ஆனந்த், மோகன்லால் இணைந்து நடித்துள்ள எபிக் திரைப்படம் 'காயம்குளம் கொச்சூன்னி'. சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, ஷைன் டாம் சாக்கோ, சித்தார்த்தா சிவா மற்றும் பல முக்கிய நடிகர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார். 18ஆம் நூற்றாண்டை மையப்படுத்திய கதையாக உருவாகியுள்ள இப்படம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய மல்ட்டிபிளெக்ஸ் ப்ராண்டான கார்னிவல் சினிமாஸை மல்ட்டிபிளெக்ஸ் பார்ட்னராக இணைத்துக் கொண்டு 24 மணி நேரம் தொடர்ச்சியாக 19 இடங்களில் 52 திரைகளில் 200க்கும் மேற்பட்ட காட்சிகள் மூலம் 'இந்தியாவின் முதல் மூவி மராத்தான்' என்ற சிறப்பை பெற்றுள்ளது. மேலும் இதுகுறித்து ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிப்பாளர் கோகுலன் கோபாலன் பேசும்போது....

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

"ஒரு தயாரிப்பாளராக என்னுடைய திரைப்படம் அனைத்து பிராந்தியங்களிலும் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, எங்கள் படம் இந்தியாவின் முதல் மூவி மராத்தான் என்று அழைக்கப்படுவதை விட ஒரு தயாரிப்பாளராக வேறு என்ன சந்தோஷம் வேண்டும். ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில், என் திரைப்படங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறேன். நமது மதிப்புகளை பாரம்பரிய மற்றும் கலாச்சார விஷயங்கள் மூலம் சொல்லி, பிரமாண்டமான படங்களை கொடுப்பதன் மூலம் உயர்த்தலாம். அந்த வகையில் ஒரு பிரமாண்டமான அனுபவத்தை நமக்கு கொடுக்க கார்னிவல் சினிமாஸ் முன் வந்திருக்கிறது. நாம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வழங்க இருக்கிறது. தங்களை உயர்த்திக் கொள்ளும் நோக்கத்தோடு செயல்படாமல், புதுமையான மற்றும் தனித்துவமான ஐடியாக்களை முன்னெடுத்து செல்வதில் முன்னோடியான அத்தகைய ஒரு மிகப்பெரிய பிராண்டுடன் இணைந்து செயல்படுவது பெருமை மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, இது ஒட்டுமொத்த அணிக்கும் கிடைத்த ஒரு பாக்கியம்" என்றார்.

kayamkulam kochunni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe