vijay sethupathi

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடத்திய படக்குழு 80 சதவிகித படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது. கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக படப்பிடிப்பு பாதியில் தடைபட்டதால் படக்குழு சென்னை திரும்பியது. தற்போது கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மெல்ல தணிந்து வருவதால் விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை அக்டோபர் மாதம் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளாதாகக் கூறப்படுகிறது. அடுத்த மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பைத் தொடங்கி எஞ்சியுள்ள காட்சிகளை படமாக்கும் யோசனையில் படக்குழு உள்ளதாம்.

Advertisment

காதலர் தினத்தையொட்டி வெளியான இப்படத்தின் முதல் பாடலான 'ரெண்டு காதல்' பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. விரைவில் இரண்டாவது பாடலை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.