vijay sethupathi kaathu vaakula rendu kadhal movie release updae

Advertisment

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்திவருகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

alt="vijay sethupathi kaathu vaakula rendu kadhal movie release updae " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c048d831-78d8-47d0-b729-c02ec77327a3" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_59.jpg" />

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்ததகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.