‘Kaathal – The Core’ to be screened at Goa Film Festival

54வது கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழா அடுத்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. இந்தியன் பனோரமா பிரிவில் 26 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. மேலும் 21 குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Advertisment

இந்த நிலையில், மலையாளத்தில் மம்மூட்டி ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'காதல் - தி கோர்' படம் கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார்.

Advertisment

இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. வருகிற டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக மலையாள திரை வட்டாரம் தெரிவிக்கின்றன. இப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஜோதிகா. மேலும் முன்னணி நட்சத்திரமான மம்மூட்டியுடன் முதல் முறையாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.